சினிமா

உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் நயன்தாரா- விக்னேஷ் சிவன்! என்ன விஷேசம்னு பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படங்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாராவும் அவரது காதலரான விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுட

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாராவும் அவரது காதலரான விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் சில படங்களை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் என்ற படத்தையும் தயாரித்திருந்தனர்.

இந்த படம் பிப்ரவரி மாதம் நடந்த ரோட்டர்டாம் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் மிக உயரிய விருதான டைகர் விருதை வென்றுள்ளது.  இத்தகைய டைகர் விருதுபெற்ற முதல் தமிழ்படம் கூழாங்கல் ஆகும். 2017ஆம் ஆண்டு ‘செக்ஸி துர்கா’ என்ற மலையாளப் படம் இந்த விருதை பெற்றுள்ளது.

இந்நிலையில் அந்த விருதினை வைத்துக் கொண்டு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது. மேலும் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

 


Advertisement