நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் இப்போதுதானா.! பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்த மாஸ் தகவல்!!
தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய் அஜித் சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் . பல்வேறு சர்ச்சைகள் தன்மீது எழுந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்தில் உள்ளார் நயன்தாரா.
மேலும் நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ்சிவனை காதலித்து வருகின்றன. மேலும் இருவரும் ஒன்றாக அடிக்கடி பல நாடுகளுக்கு சுற்றுலாவும் சென்று வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார். அதனை தொடர்ந்து இருவருக்கும் எப்பொழுது திருமணம் என கேள்விகள் எழுந்தது.
இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருமணம் நடக்கலாம் எனவும், விழா 5 நாட்கள் நடைபெறும் எனவும் நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.மேலும் திருமணத்தை வட இந்தியாவில் நடத்தலாமா? அல்லது வெளிநாட்டில் நடத்தலாமா? என்று ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது.இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.