சினிமா

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்!! அதுவும் எப்போ தெரியுமா?? தீயாய் பரவும் தகவல்!!

Summary:

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்ப

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கும் இவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். மேலும் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, பிறந்தநாள் கொண்டாடுவது  மேலும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது என பிசியாக உள்ளனர். 

இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் எப்பொழுது திருமணம் என ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் நிலவி வருகிறது. ஆனால் நயன்தாரா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் இதற்கிடையில் அவ்வப்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு திருமணம் என்று தகவல்கள் பரவி வரும்.

Trending: Vignesh Shivan's mushy message for Nayanthara sends the internet  into meltdown | Regional News | Zee News

 இந்த நிலையில் தற்போது நயன்தாரா ஜோசியர் ஒருவரிடம் தனது திருமணம் குறித்து பேசியதாகவும், அதன்படி மார்ச் மாதம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து அவர்களது தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கபடவில்லை. இந்நிலையில் இந்த செய்தியாவது உண்மையா இல்லை இதுவும் வழக்கம் போல வதந்திதானா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
 


Advertisement