சினிமா

நியூ இயர் கொண்டாட்டம் - வைரலாகும் நயன்தாரா- விக்னேஷ் சிவன்புகைப்படங்கள்!

Summary:

Nayanthara vignesh shivan new year photos

நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், நானும் ரவுடிதான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். என்னதான் விஸ்வாசம், ஐரா, கொலையுதிர்காலம், பிகில், தர்ப்பார்னு அடுத்தடுத்த படங்களில் பிசியா இருந்தாலும் தனது காதலனுடன் ஊர் சுற்றுவதை மட்டும் நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நிப்பாற்றதே இல்லங்க.

போர் அடிக்கும்போதெல்லாம் பேக்க எடுத்து மாட்டிகிட்டு எங்கையாவது கிளம்பி போறத வழக்கமாக வைத்திருக்கும் இந்த காதல் ஜோடி, சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வெளிநாட்டில் சிறப்பா கொண்டாடுனதும், அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் போட்டு ரசிகர்களை சூடாக்கியதும் எல்லோரும் அறிந்ததே.

சரி கிறிஸ்துமஸ் முடிஞ்சிடுச்சு 2 பேரும் வீட்டுக்கு வந்துருவாங்கனு பாத்தா, இப்போ நியூ இயருக்கு என்ன பன்னிருக்காங்க தெரியுமா? முன்னாடி திரும்பி புகைப்படம், பின்னாடி திரும்பி புகைப்படம், நடந்தா புகைப்படம், உட்காந்தா புகைப்படம் இப்படி புதுசு புதுசா புகைப்படம் எடுத்து மீண்டும் ரசிகர்களை உசுப்பேத்திவிட்ருக்காங்க இந்த காதல் ஜோடி.

 


Advertisement