சினிமா

தனி அறைக்குள் விக்கியை கட்டி அணைத்தபடி நயன்தாரா.. சிசிடிவி காட்சியா..? வைரலாகும் புகைப்படம்

Summary:

நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் கட்டி அணைத்தவாறு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் கட்டி அணைத்தவாறு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவிற்கு இவரது புகழ் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்று பேரும் புகழுடனும் இருக்கும் இவர் தனது வாழ்க்கையில் சந்திக்காத சர்ச்சைகளே இல்லை எனலாம்.

பல்வேறு நடிகர்களுடன் காதல் சர்ச்சையில் சிக்கி, அதில் இருந்து மீண்டு இன்று நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் நயன்தாரா. இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்துவருவது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றுதான். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்பட்டாலும் அவர்கள் என்னவோ திருமணம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் ஜாலியாக சுற்றித்திரிகின்றனர்.

இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ்சிவன் இருவரும் தனியமான அறையில் இருவரும் கருப்பு நிற உடை அணிந்தபடி கட்டி அணைத்தவாறு நிற்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அழகாக இருப்பதாக கமெண்ட் செய்தாலும், குறும்புக்கார நெட்டிசன் ஒருவர்மட்டும் ஒருவேளை யாரேனும் நயன்தாரா ரூம்குள்ள சிசிடிவி கேமிரா வச்சுட்டாங்களா என குதர்க்கமாக கமெண்ட் செய்துள்ளார்.


Advertisement