நயன்தாரா- விக்னேஷ் சிவன் வீட்டிற்கு புதுவரவு! பாடிகாட் முனீஸ்வரர் கோவிலில் நடந்த பூஜை! ட்ரெண்டாகும் புகைப்படங்கள்!!



nayanthara-vignesh-shivan-bought-new-car

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அவர் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். இருவரும் 5 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில் நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ளார்.இப்படம் ஏப்ரல் 28ல் ரிலீசாகவுள்ளது. இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் அருகே உள்ள பாடிகார்டு முனீஸ்வரர் கோயிலில்  பூஜை செய்துள்ளனர்.

nayanthara

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் நயன்தாரா லேட்டஸ்ட் வெர்சன் புதிய இன்னோவா கார் வாங்கியதாகவும், அதற்காக அவர்கள் பூஜை போட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர்களுக்கு பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

nayanthara