இதுவரை நான் யாரிடமும் சொல்லாத ரகசியம்!! விஜய் டிவியில் கண்கலங்கிய நயன்தாரா!! வைரல் வீடியோ..

இதுவரை நான் யாரிடமும் சொல்லாத ரகசியம்!! விஜய் டிவியில் கண்கலங்கிய நயன்தாரா!! வைரல் வீடியோ..


Nayanthara special interview at Vijay Tv

இதுவரை யாரிடமும் சொல்லாத ஒரு ரகசியத்தை சொல்லப்போவதாக நயன்தாரா கூறியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் நேற்று முன்தினம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்கா நடிகை நயன்தாரா விஜய் டிவியில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி தொகுப்பாளினி டிடி தொகுத்துவழங்குகிறார்.

சுதந்திரதின சிறப்பு நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி இன்று காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் 2 வது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, அதில் டிடி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு கூலாக பதிலளித்துள்ளார் நயன்தாரா.

nayanthara

விக்னேஷ் சிவனுடன் உள்ள உறவு லிவ் இன் ரிலேஷன்ஷிப்பா? அல்லது திருமணமா? என்றும், அரசியலுக்கு வருவீர்களா? பத்திரிகைகளுக்கு ஏன் பேட்டி கொடுப்பது இல்லை என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட டிடி, கடைசியாக உங்களுக்கு ஒரு டைம் மெஷின் கிடைத்து நீங்கள் வாழ்க்கையின் பின்னோக்கி சென்றால் நீங்கள் எதை மாற்றுவீர்கள் என்று நயன்தாராவிடம் கேட்கிறார்.

இதற்கு அடுத்த காட்சியில், இதுவரை நான் யாரிடமும் சொன்னதில்லை ஏனெனில் அது எனக்குள் இருக்கும் ரகசியம் என கூறி நயன்தாரா கண்கலங்குகிறார். உடனே டிடி எழுந்துசென்று நயன்தாராவை ஆறுதல் படுத்தும் காட்சிகளுடன் ப்ரோமோ வீடியோ முடிகிறது.

அது என்ன ரகசியம்? விஜய் டிவியில் அந்த ரகசியத்தை நயன்தாரா உடைப்பாரா?? ஏன் கண் கலங்கினார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.