சினிமா

சினிமாவிற்கு வரும் முன்பே விளம்பரப் படங்களில் நடித்த நயன்தாரா..! அரிய புகைப்படத்தை வெளியிட்ட லேடி மேக்கப் ஆர்டிஸ்ட்..!

Summary:

Nayanthara photos before entering into cinema

ஹரி இயக்கி சரத்குமார் நடித்த ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நயன்தாரா. முதல் படமே நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து ரஜினியின் சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி தனக்கு அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இன்று புகழின் உச்சத்தில் உள்ளனர் நயன்தாரா.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வரும் இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன் கேரளா தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தது நாம் அனைவயிரம் அறிந்த ஒன்றுதான். ஆனால், நயன்தாரா நிகழ்ச்சி தொகுப்பாளர் பணியை விட்டுவிட்டு சினிமாவிற்கு வருவதற்கு முன் சில விளம்பரங்களில் நடித்துள்ளார்.

விளம்பரப்படத்தில் நயனுக்கு மேக்கப் செய்திருந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அணிலா ஜோசப் அதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.அதில் டீன் ஏஜில் தேவதைப்போல் மின்னும் நயனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement