திருமணத்திற்கு பின் நயன்தாராவிற்கு இப்படியொரு நிலைமையா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.! Nayanthara next movie update

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டியிருக்கிறார். தமிழில் முதன் முதலில் 'ஐயா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

nayanthara

இப்படத்திற்கு பிறகு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பெயர் பெற்றார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து சினிமாவின் உச்சத்தில் இருந்த நயன்தாரா 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் நடிக்கும் போது இப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பு இவர் எந்தவித படங்களிலும் நடிக்காமல் கதைகளை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தார். மேலும் பல சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வந்த நயன்தாராவின் இடத்தை தற்போது திரிஷா பிடித்திருக்கிறார். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.

nayanthara

இதன்படி தற்போது தனது 75 வது படத்தின் சமீபத்திய அப்டேட்டை தெரிவித்திருக்கிறார். இப்படம் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக இருந்த நிலை கிருஷ்ணா என்பவரால் இயக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் கதாநாயகனாக ஜெய் நடித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும் நயன்தாரா இந்த படத்தின் மூலம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டே ஆகவேண்டும் என்னும் கட்டாயத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.