அடேங்கப்பா.. செம ஜாக்பாட்தான்! ஓடிடியில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட நயன்தாராவின் படம்! எவ்வளவு தொகைக்கு பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கு முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகை நயன்தாரா அடுத்ததாக நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். நெற்றிக்கண் படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
கொரோனா இரண்டாவது அலையால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் ஜூலை 9-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாராவின் சம்பளத்தை தவிர்த்து இப்படத்தின் பட்ஜெட் ரூபாய் 5 கோடியாம். ஆனால் இப்படம் ஓடிடி தளத்திற்கு 25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், படம் வெளியாவதற்கு முன்பே நெற்றிக்கண் படம் 20 கோடி லாபம் சம்பாதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.