முதல் முறையாக வெளியான நடிகை நயன்தாராவின் வருங்கால மாமியார் புகைப்படம்! இதோ!

முதல் முறையாக வெளியான நடிகை நயன்தாராவின் வருங்கால மாமியார் புகைப்படம்! இதோ!


Nayanthara mother in law photo

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ரஜினி, விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

வெறும் ஆடல் பாடல் என்று மட்டும் இல்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து தனி ஒரு நடிகையாகவும் வெற்றிகண்டுவிட்டார் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் தற்போது விஜய் நடித்துவரும் தளபதி 63 படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துவருகிறார்.

nayanthara

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா சர்சைளுக்கும் மிகவும் பெயர்போனவர். சிம்பு, பிரபுதேவா, ஆர்யா என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. தற்போது நானும் ரவுடிதான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வருகின்றனர். விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாரா தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுடன் தமிழ் நியூ இயர் பண்டிகையை  கொண்டாடியுள்ளார். அப்போது விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் அவரது வருங்கால மாமியார் மற்றும் நாத்தனார் இருவரும் கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

nayanthara