நயன்தாராவின் திருமணம் கண்டிப்பாக இப்போதுதான்.! ஆணியடித்ததுபோல சொன்னது யாரு தெரியுமா?

நயன்தாராவின் திருமணம் கண்டிப்பாக இப்போதுதான்.! ஆணியடித்ததுபோல சொன்னது யாரு தெரியுமா?


nayanthara-marriage-said-by-world-cup-astrologer

தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதனை தொடர்ந்து அவர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

இந்நிலையில் சினிமா துறையில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தற்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து மிகவும் சிறப்பாக நடித்து வருகிறார். மேலும் அவர் சமீபகாலமாக தொடர் வெற்றிகளை பெற்று வருகிறார்

nayanthara

நயன்தாரா,நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்ததில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். மேலும் இருவரும் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.

மேலும் அத்தகைய புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் எப்பொழுது திருமணம் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.

nayanthara

 

இந்நிலையில் சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து கணித்து  சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜோதிடர் பாலாஜி ஹாசன். இவர் தற்போது சினிமா பிரபலங்கள் தொடர்பான விஷயங்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி அவர் நடிகை நயன்தாராவின் திருமணம் இந்த ஆண்டிற்குள் கண்டிப்பாக நடக்கும் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.