படவாய்ப்பு இல்லாததால் கவர்ச்சியில் களமிறங்கிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..



nayanthara-latest-glamour-photoshoot

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. மலையாள நடிகையான நயன்தாரா தற்போது தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் 'ஐயா' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பெற்றார்.

nayanthara

இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து "லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா" எனும் பெயர் பெற்றுள்ளார்.

நயன்தாரா 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதன் பின்னும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. சமீபத்தில் ஹிந்தியில் 'ஜவான்' திரைப்படத்தில் நடித்து படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

nayanthara

இது போன்ற நிலையில், திருமணத்திற்கு முன்பு இருந்த அளவிற்கு தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லை என்பதால் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். இதன்படி தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியாக உடைந்து போட்டோஷூட் செய்து அதனை பதிவிட்டு வருகிறார். புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பாராட்டியும், ஒரு சிலர் திட்டியும் கமெண்ட் செய்து வருகின்றனர்.