சினிமா

வைரலாகும் நயன்தாராவின் முத்த காட்சி புகைப்படம்! இதோ!

Summary:

Nayanthara kissing vignesh sivan photo

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவிற்கு மிகப்பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார் நயன். முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டுமே நடித்துவந்த நயன்தாரா தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார்.

மேலும் தனி ஒரு நடிகையாகவும் நடித்து அதிலும் வெற்றிபெற்றுவருகிறார் நயன்தாரா. கடைசியாக தல அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். தற்போது தளபதிக்கு ஜோடியாக தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் நயன்தாராவும், இயக்குனர் விகேஷ் சிவனும் காதலிப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று காதலர் தினம் என்பதால் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா முத்தமிடும் புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவனின் மூக்கில் முத்தமிடுகிறார் நயன்தாரா. இதோ அந்த புகைப்படம்.


Advertisement