இப்படியா முத்தம் கொடுப்பது! என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம் - TamilSpark
TamilSpark Logo
சினிமா

இப்படியா முத்தம் கொடுப்பது! என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்

நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கிரீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இன்று சூரியனை முத்தமிடுவது போல் ஒரு புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா, தென்னிந்திய திரைப்பட ரசிகர்கள் அனைவரின் மத்தியிலும் பிரபலமான ஒரு பெயர். தன் மீது எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அனைத்தையும் தாங்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் திரையில் தனது திறமையை நிரூப்பித்து வருகிறார் நயன்தாரா.

தமிழ் சினிமாவில் அனைத்து முன்னனி ஹீரோக்களுடன் நடித்துள்ள நயன்தாராவின் நிஜ வாழ்க்கையை படமாக்க வேண்டுமென்றாலும் பல்வேறு நடிகர்களை நடிக்க வைக்க வேண்டிவரும். அதற்கான காரணம் கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்திருக்கும்.

இப்படிப்பட்ட நயன்தாராவுடன் தற்போது ஊர் ஊராக சுற்றும் பாக்கியம் பெற்றவரை பற்றியும் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். #தளபதி63 சூட்டிங்கை முடித்த நமது லேடி சூப்பர் ஸ்டார் இப்போது அந்த புதிய காதலருடன் தான் கிரீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அந்த சுற்றுப்பயணத்தில் தான் நயன்தாராவின் காதலர் வித்தியாசமான புகைப்படம் எடுக்க வேண்டுமென்று முயற்சித்து வித்தியாசமான புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். நயன்தாரா அந்த வரிசையில் இன்று அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சூரியனை முத்தமிடுவதுபோல் எடுக்கப்பட்டுள்ளது. 


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo