சினிமா

களத்தில் இறங்கும் நயன்தாரா! சூடுபிடிக்கும் தளபதி#63 படப்பிடிப்பு களம்

Summary:

Nayanthara jobs thalapathy 63 shooting

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் தளபதி விஜய். முதல் இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்றநிலையில் மூன்றாவது படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.

மேலும், தாப்தி 63 படம் விளையாட்டை மையமாக கொண்ட படமாக இருக்கும் என்பதால் இன்னும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகிபாபு, கதிர், நாஞ்சில் சம்பத் போன்ற முக்கிய பிரபலங்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. முதலில் பின்னி மில்லில் துவங்கிய படப்பிடிப்பு கடைசியாக SRM பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. படப்படிப்பு நடைபெறும் இடங்களுக்கெல்லாம் விஜய் ரசிகர்கள் நேரில் சென்று ஆராவாரம் செய்யும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளன.

இந்நிலையில், தளபதி 63 படத்தின் கதாநாயகியான நயன்தாராவும் அடுத்த 3 தினங்களும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் என்ற அறிவிப்பினை படக்குழு உறுதிசெய்துள்ளது. இந்த 3 நாட்களும் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறதாம். 


Advertisement