சினிமா

என்னது?? விரைவில் மரம் ஒன்றை திருமணம் செய்ய இருக்கும் நயன்தாரா.. இது என்ன புது புரளியா இருக்கு..

Summary:

என்னது?? விரைவில் மரம் ஒன்றை திருமணம் செய்ய இருக்கும் நயன்தாரா.. இது என்ன புது புரளியா இருக்கு..

பிரபல நடிகை நயன்தாரா விரைவில் மரம் ஒன்றை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் உலா வரத்தொடங்கியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நயன்தாராவும், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர்.

இவர்கள் காதல் விவகாரம் அனைவர்க்கும் தெரிந்தாலும், இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்ற கேள்விதான் அனைவர் மனதிலும் உள்ளது. இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது எனவும், திருமணம் கூட நடந்துவிட்டது என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது.

தற்போது புது தகவல் ஒன்று கிளம்பியுள்ளது. அதவாது, நடிகை நயன்தாராவிற்கு செவ்வாய் தோஷம் இருப்பதாகவும், இதனால் அவர் நேரடியாக விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ள கூடாது என்றும், செவ்வாய் தோஷம் நீங்கி, விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொள்ள, முதலில் அவர் ஒரு மரத்தை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்று கூறப்படுகிறது.


Advertisement