சினிமா

பிகில் சிங்கப்பெண்ணிற்கு அழகிய பரிசளித்து அசத்திய லேடி சூப்பர் ஸ்டார். ! வைரலாகும் புகைப்படங்கள். !

Summary:

Nayanthara gift to actress amritha aiyer

lஇயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து விஜய் நடித்த திரைப்படம் பிகில். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மேலும் இந்த படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. 

இந்நிலையில் பிகில் படத்தில் விஜயின் கால்பந்து அணியில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை அம்ரிதா ஐயர். அவர் சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் அவருக்கு பிகில் பட நாயகி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அழகிய வாட்ச்  ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

 இந்த புகைப்படத்தை அம்ரிதா மிகவும் மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து  அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 


 


Advertisement