தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் நயன்தாரா.. செருப்பு காலுடன் கோயிலுக்குள் சென்ற காரணம் என்ன.?

தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் நயன்தாரா.. செருப்பு காலுடன் கோயிலுக்குள் சென்ற காரணம் என்ன.?


Nayanthara controversy video viral

தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

nayanthara

தமிழில் சமீபத்தில் 'அன்னபூரணி' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்கில் வெளியாகி பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நயன்தாரா.

மேலும் 'அன்னபூரணி' திரைப்படத்தில் மதத்தின் பெயரால் சர்ச்சைகளும் கிளம்பியது. இவ்வாறு தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நயன்தாரா. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பின் போது கோவில் காட்சிகளில் செருப்பு அணிந்து நடித்துள்ளார்.

கோவிலில் இருந்து செருப்பு அணிந்து வெளியே வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரும் இவரை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். இந்து கடவுளை தொடர்ந்து அவமதித்து வரும் செயலை நயன்தாரா செய்து வருகிறாரா என்று பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

nayanthara

தற்போது நயன்தாரா அடுத்ததாக  தனது கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கதாநாயகனின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக அறிவிப்புகள் வெளியாகி வந்தன. கதாநாயகியாக மட்டுமே நடித்து வந்த நயன்தாராவிற்கு ஏன் இந்த வேலை என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.