காதலரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நயன்தாரா! வைரலாகும் வீடியோ

காதலரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நயன்தாரா! வைரலாகும் வீடியோ


nayanthara-celebrated-her-lover-birthday-in-grand

சமீபத்தில் நடிகை நயன்தாராவுடன் நெருக்கமாக இருந்து வருபவர் இயக்குனர், பாடலாசிரியர் என பல பரிமாணங்களை கொண்டுள்ள விக்னேஷ் சிவன். 

சொந்த வாழ்க்கையில் பல சோதனைகள் வந்தாலும் அவை அனைத்தையும் தாண்டி இன்று திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது படங்கள் சமீபகாலமாக தொடர் வெற்றியை பெற்று வருகின்றன.

ஹீரோ யாராக இருந்தாலும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நயன்தாரா. அப்படி தேர்வு செய்து நடித்த படங்களான அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், போன்ற படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது. 

nayanthara

மேலும் நயன்தாராவிற்கு இன்று உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருந்து வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரைப் பற்றியும் பல தவறான விமர்சனங்கள் எழுந்து கொண்டேதான் இருக்கின்றன. இருப்பினும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா தனது காதலன் பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.