மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
தனது காதலனுடன் கோலாகலமாக பிறந்தநாளை கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

லேடி சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கப்படும் நடிகை நயன்தாரா. இவர் விஜய், அஜித், சூர்யா, ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
நடிகை நயன்தாரா தற்போது இயக்குநர் மற்றும் பாடலாசிரியரான விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் திருமணத்தை பற்றி இன்னும் வாய் திறக்கவில்லை. ஆனால் ஜோடியாக உலகம் முழுவதும் சுற்றி வருகின்றனர்.
மேலும் விக்னேஷ் சிவன் நெற்றிக்கண் என்ற படத்தை முதல் முதலாக தயாரித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா தனது பிறந்த நாளை தனது காதலான விக்னேஷ் சிவனுடன் இணைந்து கோலாகலமாக கொண்டாடியுள்ளார். தற்போது அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
#BirthdayBash 🎉 Celebrations 🎂 Big Day ✨💥 pic.twitter.com/OmY8HKltHc
— Nayanthara✨ (@NayantharaU) November 18, 2019