முதல்வரை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கிய நயன்தாரா-விக்னேஷ் சிவன்..! அருகிலிருப்பது யாருனு பார்த்தீங்களா?..!

முதல்வரை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கிய நயன்தாரா-விக்னேஷ் சிவன்..! அருகிலிருப்பது யாருனு பார்த்தீங்களா?..!


nayanthara-and-viknesh-presents-wedding-invitation-to-c

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது திருமண அழைப்பிதழை, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கியுள்ளனர்.

கோலிவுட் வட்டாரத்தில் ரஜினி, விஜய், அஜித் போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நயன்தாரா. இவர் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்.

இவர் இறுதியாக காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை சமந்தா ஆகியோர் இவருடன் சேர்ந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு "நானும் ரவுடிதான்" என்ற படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

cinemaஇருவருக்கும் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெறும் என்று தகவல் வெளியாகிய நிலையில், பின்னர் மகாபலிபுரத்திற்கு திருமணம் மாற்றி வைக்கப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் இவர்களின் திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.

இந்த நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளனர். அப்போது சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.