
Nayanthara and keerthy suresh casting in rajinikanths next movie
பேட்ட படத்தை அடுத்து இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த பொங்கலுக்கு வெளியான பேட்ட படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. பேட்ட படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.
தற்போது முருகதாஸ் படத்தில் நடிக்க தயாராகிவருகிறார் ரஜினிகாந்த். சர்க்கார் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டாரை இயக்கவுள்ளார் முருகதாஸ். இந்நிலையில் முருகதாஸ் ஏற்கனவே ஒரு கதை சொன்னதாகவும் அந்த கதை ரஜினிக்கு பிடிக்காததால் வேறொரு கதை தயார் செய்து அதனை சூப்பர் ஸ்டார் ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் படத்தில் யார் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்று இன்னும் உறுதியாகாத நிலையில் இந்த படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் என இரண்டு முன்னணி நடிகைகள் நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்றாலும், ஒருவேளை நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் இருவரும் ஒன்றாக நடித்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.
Advertisement
Advertisement