
Nayanthara and jothika
தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய் அஜித் சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகிதென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் . பல்வேறு சர்ச்சைகள் தன்மீது எழுந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்தில் உள்ளார் நயன்தாரா.
இந்நிலையில் தற்போது நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர்காலம் படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அதே தேதியில் நடிகை ஜோதிகா
நடித்துள்ள ஜாக்பாட் படமும் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சஸி படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. ஹீரோயினை மையப்படுத்திய கதைகளை கையில் எடுத்துள்ள இவர்களில் யாருடைய படம் அதிக வசூல் ஈட்டப்போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
Advertisement
Advertisement