சினிமா

அட! அண்ணாத்த படத்தில் நயன்தாரா இப்படி நடிக்கிறாரா! தீயாய் பரவும் தகவல்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

Nayanthara act as mother for keerthy suresh in annathe movie

தமிழ் சினிமாவில் பல உச்ச பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.

இந்நிலையில் மாபெரும் ஹிட் கொடுத்த விஸ்வாசம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா, சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாக்கிவரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தில்  முன்னணி கதாநாயகிகளான குஷ்பு, மீனா, நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க உள்ளனர். இதன்  படப்பிடிப்பு கடந்த வருடம் ஹைதராபாத் பிலிம் சிட்டியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் திடீரென அசுரவேகத்தில் பரவிய கொரோனாவால் படப்பிடிப்புகள் தடைசெய்யப்பட்டது. மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என தெரியாத அளவிற்கு தற்போதைய சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தின் கதை என்ன?  நயன்தாரா எந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாகவும், கீர்த்தி சுரேஷ்க்கு அம்மாவாகவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை. ஆனாலும் ரசிகர்கள் நயன்தாரா அம்மாவாக  நடிக்கிறாரா என பேரதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

 


Advertisement