வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
என்னது! இப்படி ஒரு சோதனையா நயன்தாராவுக்கு, வெளியான வீடியோவால் கொந்தளித்துப் போன ரசிகர்கள்.
நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். அந்த டைட்டிலுக்கு ஏற்றார் போல் அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.
இவர் தற்போது ரஜினியுடன் தர்பார் படத்தில் நடித்து வருகின்றார், இது மட்டுமின்றி சிரஞ்சீவி, நிவின்பாலி ஆகியொருடன் ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் நயன்தாரா ஏற்கனவே நடிகர் சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து பிரேக்கப் செய்துள்ளார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒரு செய்தி.
இந்த நிகழ்வை வைத்து கொண்டு தற்போது சந்தானம் நடிப்பில் வெளியாக இருக்கும் A1 படத்தில் நயன்தாராவை கேவலப்படுத்துவது போல் காமெடி காட்சி அமைந்துள்ளது. இந்த காட்சியை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் மிகவும் ஆவேசமடைந்துள்ளனர்.