சினிமா

தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்! தீயாய் பரவும் தகவல்! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

Summary:

தமிழ்சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளங்களை கொண்

தமிழ்சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளங்களை கொண்டு உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது பிறந்தநாள் மற்றும் படம் வெளியாகும் நாட்களை அவரது ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த அவரது 64வது திரைப்படமான மாஸ்டர் கொரோனா ஊரடங்கால் ரிலீசாவது தள்ளிப் போன நிலையில் பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மற்றும் வசூல் சாதனையும் படைத்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் இயக்கத்தில் தனது 65வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

நவாசுதீன் சித்திக்க்கான பட முடிவுகள்

தளபதி 65 படத்தின் அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில் தளபதி 65 படத்தில் விஜய்யை எதிர்க்கும் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.  நவாசுதீன் சித்திக் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார்.
 


Advertisement