சூர்யாதேவியின் தொடர்பால் திட்டமிட்டு அசிங்கப்படுத்துறாங்க.! நடிகை வனிதா பரபரப்பு குற்றசாட்டு! அதிரடியாக விளக்கமளித்த விஜய் டிவி பிரபலம்!

Summary:

Nanjil vijayan talk about vanitha complaint about him

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரபலமானவர் வனிதா. அதனை தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். பின்னர் தனியாக யூடியூப் சானல் ஒன்றை தொடங்கி, மக்கள் மத்தியில் மேலும்  பிரபலமான நடிகை வனிதா கடந்த மாதம் 27ம் தேதி இயக்குனர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நெட்டிசன்கள் பலரும் வனிதாவை மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் நடிகை வனிதா சமீபத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஒன்றில் சூர்யாதேவி என்ற பெண் தொடர்ந்து என்னை பற்றி அவதூறாக பேசி வருகிறார்.அவருக்கு கலக்கப்போவது யாரு புகழ் நாஞ்சில் விஜயன் உடன் ரொம்ப வருஷமாக பழக்கம் உள்ளது. அவர்கள் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு என்னை அசிங்க படுத்துகிறார்கள் என கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து நாஞ்சில் விஜயன் கூறியதாவது, சூர்யா தேவி பல வருடங்களுக்கு முன்பு சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தபோது அவருக்கு சிறு நிகழ்ச்சிகளில் வாய்ப்பு இருந்தால் நடிக்க கூறி வந்தேன். ஆனால் நாளடைவில் அவரது சரளமாக கெட்ட வார்த்தை பேசும் பழக்கம் மற்றும் சில குணங்கள், நடவடிக்கைகள் எனக்கு பிடிக்காததால் அவரை விட்டு விலகி, ஒரு கட்டத்தில் பேசுவதையே முழுமையாக நிறுத்திவிட்டேன்.

 அதனைத் தொடர்ந்து தற்போதுதான் எனது யூடியூப் சேனலுக்காக வனிதா- பீட்டர் பால் திருமணம் பற்றி பேசுவதற்காக அவருக்கு போன் செய்தேன். அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. மேலும் அதில் நான் வனிதாவை பற்றி எதுவும் தவறாக பேசவில்லை. 

மேலும் எனக்கும், சூர்யாதேவிக்கும்  தொடர்பு இருப்பதாக கூறுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது. இருவருமே மனதளவில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் கவுன்சிலிங் கொடுப்பது  நல்லது  என கூறியுள்ளார்.


Advertisement