என்னடா சோதனை இது.! குந்தவை ரசிகர்களே மன்னிச்சிடுங்க.! நாஞ்சில் விஜயன் வெளியிட்ட வீடியோவால் செம ஷாக்!!



Nanjil vijayan in kunthavai getup video viral

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து டாப் நடிகையாக வலம்வந்த திரிஷா நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்ததன் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையின் லுக் அனைவரையும் பெருமளவில் கவர்ந்துள்ளது. மேலும் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் குந்தவை கெட்டப்பில் மேக்கப் செய்து போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஜய் டிவி காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் நிகழ்ச்சி ஒன்றிற்காக குந்தவை கெட்டப்பில் மேக்கப் போட்டுள்ளார்.

அப்பொழுது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், பொன்னியின் செல்வன் குந்தவை ரசிகர்கள்  மன்னிக்கவும் எனவும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் என்னடா குந்தவைக்கு வந்த சோதனை.!  என கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.