தீபாவளிக்கு நேரடியாக சன் டிவியிலேயே ரிலீஸாகும் திரைப்படம்! அதுவும் யாருடைய படம் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்!nanga-rompa-busy-movie-released-in-sun-tv

தமிழ் சினிமாவில் இயக்குனர் தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டு விளங்கும் சுந்தர்.சி தற்போது அரண்மனை 3 படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார். இப்படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து சுந்தர் சி கன்னட மொழியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற மாயாபஜார் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரித்து வருகிறார். இப்படத்தை பத்ரி இயக்கி வருகிறார். நாங்க ரொம்ப பிஸி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில்  ஷாம், பிரசன்னா, அஸ்வின், யோகி பாபு, ஸ்ருதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Sundar c

இந்த திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தீபாவளியை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.