29ம் தேதி திரைக்கு வருகிறது நந்திவர்மன்; ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு.!
ஜிவி பெருமாள் வரதன் இயக்கத்தில், ஏகே பிலிம் பேக்டரி தயாரிப்பில், நடிகர்கள் சுரேஷ் ரவி, ஆஷா கௌடா, நிழல்கள் ரவி, போஸ் வெங்கட், ஜெஎஸ்கே கோபி, முல்லை கோதண்டம் உட்பட பலரும் நடித்துள்ள திரைப்படம் நந்திவர்மன்.
இப்படம் செஞ்சி, விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டது. படம் பல்லவர்களின் வரலாற்று தொடர்புடைய படம் என்றும் கூறப்படுகிறது.

வரும் டிசம்பர் 29ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. படத்தின் பாடல், டிரைலர் காட்சிகள் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றன. இந்நிலையில், படம் வெளியாவதை முன்னிட்டு, ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.