சினிமா

சமந்தாவை கேலி செய்த மாமனார், அப்படி என்னதான் சொன்னார் தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி...!

Summary:

nagarjun-teased-samantha

சமந்தா நடிப்பில் உருவான படம் தான்  ‘யு டர்ன்’ இந்த படம் நேற்று ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதே படத்துடன் அவரது கணவர் படமும் நேற்று ரிலீஸ் செய்துள்ளனர். அந்த படம் தான் ‘சைலஜா அல்லுடு ரெட்டி’ மற்றும் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த படம் சீமராஜா ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தெலுங்கு யூ டர்ன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சமந்தா மற்றும் அவரது மாமனார் நாகார்ஜுனா ஆகியோர் பங்கேற்று பத்திரியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சுவாரசிய பதில்களும் நகைசுவை பதிகளும் அளித்துள்ளனர். 

அப்பொழுது பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பேசிய நாகார்ஜுன் கூறுகையில்  “பவன் குமார் இயக்கத்தில் சுயாதீன படமாக உருவான ‘லூசியா’ கன்னடத்தில் வெற்றி பெற்றது. அதனையடுத்து மிகப்பெரும் வெற்றியாக ‘யு டர்ன்’ அமைந்துள்ளது. அதன் டிரெய்லர் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டுள்ளேன். இந்த படத்தில் எனது மருமகள் நடித்தது எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று கூறியிருக்கிறார்.

இந்தப் படத்தின் கதையை என் மருமகள் சமந்தா என்னிடம் சொல்லும்போது ரொம்ப திரில்லிங்காக இருந்தது. நம் திரைத்துறையில் இது போன்று புதிய முயற்சிகளைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் கூறியுள்ளார். 

மேலும் சமந்தாவின்  மூன்று படங்கள் ஒரே நாளில்  வெளியாகின்றன. சமந்தா ஏதேனும் கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்கிறார் போல ” என கிண்டல் செய்துள்ளார். இதை கேட்ட சமந்தா மகிழ்ச்சியடைந்தார்.


Advertisement