சினிமா

மகள் வயது பெண்ணுடன் இதெல்லாம் தேவையா- பிரபல நடிகரை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!

Summary:

naga arujun

அகினேனி நாகார்ஜூனா ஓர் இந்தியத் திரைப்படநடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக ஆந்திரத் திரைப்படத்துறையில் பணிபுரிகிறார், ஒரு சில பாலிவுட் மற்றும் தமிழ் படங்களிலும் பணியாற்றியிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இவரது நடிப்பில் உருவாக்கிய மன்மதடு 2  படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தில் நடிகர் நாகார்ஜுன் தனது மகள் வயது நடிகையுடன் உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. டீசர் மற்றும் ட்ரைலரில் இதை கண்ட ரசிகர்கள் இரண்டு மகன்களுக்கு அப்பாவாக இருந்து கொண்டு இப்படி செய்யலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இந்த வயதில் மகள் வயது பெண்ணுடன் ரொமான்ஸ் எல்லாம் தேவையா என நெட்டிசன்கள் நடிகர் நாகார்ஜுனா திட்டித் தீர்த்து வருகின்றனர்.


Advertisement