"நாட்டாமை படத்தில் நடித்த டீச்சரை நியாபகமிருக்கா?!" இப்போ எப்படி இருக்கார் பாருங்க!

"நாட்டாமை படத்தில் நடித்த டீச்சரை நியாபகமிருக்கா?!" இப்போ எப்படி இருக்கார் பாருங்க!



Naddamai movie teacher latest photos viral

1994ம் ஆண்டு கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டான திரைப்படம் "நாட்டாமை". இப்படத்தில் சரத்குமார் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக குஷ்பூ மற்றும் மீனா ஆகியோர் நடித்திருந்தனர்.

Naddamai

மேலும் இப்படத்தில் பொன்னம்பலம், விஜயகுமார், மனோரமா, வைஷ்ணவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தெலுங்கிலும் "பெத்தராயுடு" என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிடப்பட்டு அங்கும் சக்கை போடு போட்டது. மேலும் ஹிந்தியிலும் ரீமேக் செய்து அங்கும் பட்டையைக் கிளப்பியது.

இந்நிலையில் ராமராஜனுடன் "வில்லுப்பாட்டு" படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ராணி, அதன் பிறகு வேறு வாய்ப்புகள் வராததால், ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு வந்தார். இதையடுத்து நாட்டாமை படத்தில் டீச்சர் கேரக்டரில் நடித்து மிகவும் பிரபலமானார்.

Naddamai

இதையடுத்து விக்ரமுடன் ஜெமினி படத்தில் "ஓ போடு" பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். இதையடுத்து ஹிந்திப்பட தயாரிப்பாளர் பிரஷாந்த் பூராவை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்ட இவர் சினிமாவை விட்டு விலகி விட்டார். இவரது சமீபத்திய புகைபபடங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.