சினிமா

நாச்சியார் படத்தில் நடித்த குட்டிப்பெண்ணா இது! எவ்வளவு அழகா மாறிட்டாருனு பாருங்க

Summary:

Nachiyar herione ivana new pics

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான நாச்சியார் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவானாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் பிறந்தவரான இவானா தனது 18 வயதிலேயே இயக்குனர் பாலா இயக்கத்தில், ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான நாச்சியார் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு மலையாள படத்திலும் நடித்துள்ளார்.

இந்தநிலையில் தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை இரும்புத்திரை இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கி வருகிறார்.

நாச்சியார் படத்தில் ஒரு குப்பத்து பெண்ணாக நடித்திருந்த இவானா தற்போது மாடர்ன் உடைகளில் போட்டோ சூட் நடத்தி கலக்கி வருகிறார். நாச்சியார் படத்தில் நடித்த குட்டிப்பெண்ணா இவர் என ஆச்சர்யப்படும் அளவிற்கு அழகாக தோன்றுகிறார் நடிகை இவானா.


Advertisement