
naangu-naatkalaaga-vasoolai-therikka-vitta-chekka-sivantha-vaanam
மணிரத்தினம் இயக்கத்தில் உருவான செக்க சிவந்த வானம் கடந்த 27ம் ரிலீஸானது படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் திரையுலக நட்சத்திரங்கள் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, பிரகாஷ் ராஜ், அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்தனர். படத்தை பார்த்தவர்களில் பெரும்பாலானோர் அதை பாராட்டினார்கள்.
அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர். அதிகமானோர் நடித்துள்ளனர். இதனையடுத்து வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் வெளிவந்து நான்கு நாட்களே ஆன நிலையில் உலகம் முழுவதும் ரூ.50 கோடியை வசூலித்துள்ளது என்று பாக்ஸ் ஆபிசில் தகவல்கள் வெளிவந்துள்ளது
செக்கச் சிவந்த வானம் ரிலீஸான 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 21.7 கோடி வசூல் செய்துள்ளது.
செக்கச் சிவந்த வானம் ரிலீஸான மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 21.7 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாள் ரூ. 8.05 கோடியும், இரண்டாவது நாள் ரூ. 6.15 கோடியும், மூன்றாவது நாள் ரூ. 7.50 கோடியும் வசூல் செய்துள்ளது. நேற்றும் செக்கச் சிவந்த வானம் படம் ஓடிய தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
இந்நிலையில் 100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement