சினிமா

பேட்ட: மும்பையில் அதிகாலையே பெண்கள் என்ன செய்துள்ளார்கள் பாருங்க! வீடியோ

Summary:

Mumbai girl fans for petta

சூப்பர் ஸ்டாரின் மாஸான ஸ்டைலில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது பேட்ட. மும்பையில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் அதிகாலையே பொங்கல் வைத்து வரவேற்றுள்ளனர். 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’ திரைப்படம் இன்று ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. ரஜினியின் இளமைத் தோற்றத்தில் வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

பாட்ஷா, படையப்பா படங்களுக்கு அடுத்து ரஜினி நடித்துள்ள மாஸான படம் இது தான் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை ரஜினி ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் அதிகாலை முதலே ரஜினி ரசிகர்கள் தாரை தப்பட்டையுடன் பட்டைய கிளப்பினர். 

தமிழக ரசிகர்களுக்கு ஒரு படி மேலே சென்ற மும்பை ரஜினி மகளிர் ரசிகர்கள் அதிகாலையில் திரையரங்கின் முன்பு பொங்கல் வைத்து கொண்டாடியுள்ளனர். அதன் வீடியோ காட்சிகள் தற்போது பரவி வருகிறது. 


Advertisement