படவாய்ப்பு தருவதாக துணைநடிகையிடம் அத்துமீறிய பயங்கரம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!!

படவாய்ப்பு தருவதாக துணைநடிகையிடம் அத்துமீறிய பயங்கரம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!!


mumbai-debut-actress-sexual-harassment-issue

துணைநடிகைக்கு படவாய்ப்பு தருவதாக கூறி, பங்கு சந்தை தரகர் அத்துமீறிய பயங்கரம் நடந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த பங்கு சந்தை தரகர் ஜிக்னேஷ் மேத்தா (வயது 48). இவருக்கு விருந்து நிகழ்ச்சியின் மூலமாக 25 வயதுடைய துணை நடிகையின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் செல்போன் மூலம் பேசி வந்த நிலையில், பங்கு சந்தை தரகர் துணைநடிகைக்கு படவாய்ப்பு வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். 

மேலும், அந்தேரியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு படவாய்ப்பு தொடர்பாக ஒருவரை சந்திக்க, துணை நடிகையை ஜிக்னேஷ் மேத்தா நேற்றிரவு அழைத்துள்ளார். பின் அவரும் ஹோட்டலுக்கு சென்ற நிலையில், அங்கு ஒரு அறையில் இருந்த ஜிக்னேஷ் நடிகையிடம் அத்துமீற முயற்சித்துள்ளார். 

actressactress

இதனால் அதிர்ந்த நடிகை எப்படியோ அவரது பிடியிலிருந்து தப்பிவந்ததை தொடர்ந்து, ஹோட்டல் வரவேற்பு அறையில் இருந்த போனின் மூலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலின் பேரில் ஹோட்டலுக்கு சென்ற காவல்துறையினர் நடிகையிடம் அத்துமீறிய பங்கு தரகரை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Note: Title & Inside Images Are Representative