சினிமா

தன் தந்தை குறித்து கண்ணீருடன் மிக உருக்கமாக முகேன் வெளியிட்ட பதிவு! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

Summary:

mugen tweet about his father

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டு பிக்பாஸ் பட்டத்தை வென்றவர் மலேசியாவை சேர்ந்த பாடகர் முகேன் ராவ். பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரிடமும் மிகவும் நட்புடனும், அன்பாகவும் நடந்து கொண்ட முகேனுக்கெனவே ஏராளமான தமிழ் ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் அவர்கள் பாடிய சத்தியமா நான் சொல்லுறேன்டி பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது.

 தனது சிறுவயதிலிருந்து ஏராளமான கஷ்டங்களை சந்தித்த முகேன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றபிறகு பல முன்னேற்றங்களை கண்டார். இந்நிலையில் முகேனின் தந்தை பிரகாஷ் ராவ் சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் பிக்பாஸ் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் முகேனுக்கு ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் முகேன் தனது தந்தை குறித்த மிக உருக்கமாக ஸ்டோரி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  அதில் என் வாழ்க்கையின் கடினமான பகுதிகளை நீங்கள் கேள்விப்பட்டிப்பீர்கள், இது நிச்சயமாக அதை விட மிக கடினமானதாகும். எனது மரபணுக்கள், குணாதிசயங்கள், திறமை, தோற்றம், திறன்கள் மற்றும் வாழ்க்கை அவர் கொடுத்தது. என் அப்பா இப்போது எங்களுடன் இல்லை, இறைவனிடம் சென்றுவிட்டார்.

உங்கள் இரங்கல், அக்கறை, கவனிப்பு மற்றும் வாழ்த்துக்களை ஊற்றிய அனைவருக்கும் எனது இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி, இந்த கடினமான நாட்களில் உங்கள் இரங்கல், அக்கறை, கவனிப்பு ஆகியவற்றிற்கு எனது மனமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார். மேலும் அவருடைய தந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு லவ் யூ அப்பா என்று கூறியுள்ளார்.


Advertisement