சினிமா

எம்.எஸ் பாஸ்கரின் அழகிய மகளுக்கு திருமணம்! அடேங்கப்பா.. யாரெல்லாம் நேரில் வந்து வாழ்த்திருக்காங்க பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், சிறந்த குணச்சித்திர நடிகராகவும் நடித்து ரசிகர்கள் மத்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், சிறந்த குணச்சித்திர நடிகராகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் எம்.எஸ் பாஸ்கர். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும், ஆதித்யா என்ற மகனும் உள்ளனர். எம்.எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் சிறுவயது விஜய்சேதுபதியாக நடித்து அசத்தி அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டார்.

மேலும் அவரது மகள் ஐஸ்வர்யா. டப்பிங் கலைஞராக உள்ளார். இவர் சினிமாவில் பல ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யாவிற்கு தொழிலதிபர் என்.ஏ.சுதாகரின் மகன் அகுல் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் சில தினங்களுக்கு முன்பு திருமண
வரவேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சரத்குமார், விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, டி.ராஜேந்தர், அருண் விஜய், பரத், கவின், மனோபாலா, மயில்சாமி, சூரி, பிரசன்னா, சினேகா, ரமேஷ் கண்ணா, ஆனந்த்ராஜ், சந்தியா, குட்டி பத்மினி, தேவதர்ஷினி, சாந்தினி, இயக்குனர்கள் எஸ் ஏ சந்திரசேகர், விக்ரமன், சித்ரா லட்சுமணன், ஆர்.பாண்டிராஜ், மோகன்ராஜா,  இசையமைப்பாளர் தேவா, பாடகர் மனோ என இன்னும் பல பிரபலங்கள் நேரில் வந்து திருமண ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement