அஜித்துக்கு ஜோடியாகும் மிருனாள் தாக்கூர்? வெளியான அசத்தல் தகவல்!

அஜித்துக்கு ஜோடியாகும் மிருனாள் தாக்கூர்? வெளியான அசத்தல் தகவல்!



Mrunal thakur pair with Ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

AK 63

மேலும், இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும், வில்லன் கதாபாத்திரத்தில் ஆக்சன் கிங் அர்ஜுனன் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா மற்றும் ஆரவ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட படபிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அஜித் குமாரின் 63 வது திரைப்படத்தில் நடிக்கும் நடிகை மற்றும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. 

AK 63

அதன்படி, நடிகர் அஜித்குமாரின் 63 வது திரைப்படத்தை மார்க் ஆண்டனி திரைப்பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று பரவி வருகிறது. மேலும், இந்த படத்தில் சீதாராமம் பட நடிகை மிருனாள் தாக்கூர், அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.