"புதுப் புது கதாப்பாத்திரத்தில் நடிக்கவே விரும்புகிறேன்!" மிருணாள் தாகூர்!



Mrunal dhakur latest interview

2014ம் ஆண்டு "விட்டு தண்டு" என்ற மராத்தி படத்தில் நடிகையாக அறிமுகமானவர் மிருணாள் தாக்கூர். முன்னதாக இவர் "கும் கும் பாக்யா" என்ற தொலைகாட்சி தொடரில் நடித்துப் பிரபலமானார். தற்போது இவர் மராத்தி, ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

Mrunaal

2022ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான "சீதா ராமம்" திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டு, அனைவராலும் பாராட்டப்பட்டது. மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விருது, தென்னிந்தியா சர்வதேச திரைப்பட விருது, லண்டன் இந்திய திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார் மிருணாள் தாகூர்.

தொடர்ந்து இவர் பல வெப் சீரிஸ்களிலும் கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் நானியுடன் "ஹாய் நன்னா" என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் டீசர் காட்சி சமீபத்தில் வெளியானது. இதில் மிருணாள் தாகூர் உதட்டு முத்தக் காட்சியிலும் நடித்துள்ளார்.

Mrunaal

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஒரு பேட்டியில் மிருணாள், " குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமல்ல பல மொழிகளிலும் நடிக்கவே விரும்புகிறேன். புது விதமான, வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவே விரும்புகிறேன்" என்று மிருணாள் தாகூர் கூறியுள்ளார். இப்பேட்டி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.