மகளின் மரணத்தில் இருந்து மீள வழியின்றி தவிக்கும் விஜய் ஆண்டனியின் மனைவி: உருக்கமான பதிவு.!Mrs Pathima Vijay Antony Tweet about  Daughter Death 

 

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம்வந்த நபர் விஜய் ஆண்டனி. மாறுபட்ட கதையம்சங்களை கொண்ட திரைப்படத்தில் நடித்து, அவை மக்களிடையே கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அவர் நடிப்பில் பெரிய அளவில் கவனிக்கப்பட்டார்.

இவரின் மனனவி பாத்திமா. கடந்த 2006ம் ஆண்டு தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது. தம்பதிகளின் அன்புக்கு அடையாளமாக மீரா, லாரா என இரண்டு மகள்கள் இருந்தனர். 

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி - பாத்திமா தம்பதியின் மகள் மீரா எதிர்பாராத விதமாக திடீரென தற்கொலை செய்துகொண்டார். அவரின் மறைவு குடும்பத்தை கடுமையாக உலுக்கியது. 

அவரின் தற்கொலைக்கான காரணம் என்பது தற்போது வரை தெரியவில்லை. இந்நிலையில், பாத்திமா தனது எக்ஸ் பக்கத்தில், மகளின் நினைவுகள் தொடர்பாக கருத்து பகிர்ந்துள்ளார்.

அந்த உருக்கமான பதிவில், "மீரா தங்கமே, உனது பியானோ உனது கைகளால் வாசிக்க நீண்ட நாட்களாக காத்துகொண்டு இருக்கிறது, ஏக்கத்தில் தவிக்கிறது. நாங்கள் இன்றளவும் நம்பிக்கையாக காத்திருக்கிறோம். நீ விரைந்து சென்றதால், உலகம் உனக்கானதாக இல்லை என நினைக்கிறோம்.

ஆனால், உனது அம்மாவான நான் இன்னும் இங்கேயே இருக்கிறேன். வாழ்க்கை - மரணம் இடையே இருக்கும் கருத்துக்களை என்னால் புரிந்துகொள்ளவும் இயலவில்லை. நான் உன்னை சந்திக்கும் வரையில், நன்றாக சாப்பிட்டு மகிழ்ச்சியாக இரு. அம்மா உன்னை நேசிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.