சினிமா

மீண்டும் திறக்கப்பட்ட குக் வித் கோமாளி செட்! ஆனா இந்த தடவை யாரெல்லாம் வந்துருக்காங்க பார்த்தீங்களா!! வைரலாகும் வீடியோ!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும், ரசிகர்களை பொழுதுபோக்கும் வகையிலும

விஜய் தொலைக்காட்சியில் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும், ரசிகர்களை பொழுதுபோக்கும் வகையிலும் வித்தியாசமாக ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. இவ்வாறு சமையல் திறமையை ஊக்குவிக்கும் வகையில், அதனையே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் ஒளிபரப்பாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சிக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது. மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில் தற்போது புதியதாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதில் பாடகர்கள், நடிகர்,நடிகைகள் என பலரும் தங்களது நிஜ ஜோடிகளுடன் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஷோவிலும் வித்தியாசமாக கலகலப்பாக ஏராளமான டாஸ்குகள் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வாரம் சமையல் டாஸ்க் கொடுக்கப்பட உள்ளது. அதற்காக மீண்டும் குக் வித் கோமாளி செட் திறக்கப்பட்டு அதில் போட்டியாளர்கள் சமைத்துள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.


Advertisement