தமிழகம்

இப்படி செஞ்சுட்டீங்களே! நள்ளிரவில் மாமியார் செய்த காரியம்! கோழி திறக்க சென்ற மருமகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

Summary:

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அற்புதம் நகரில் வசித்து வருபவர் மேரி. இவர் கணவரை பிரிந்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அற்புதம் நகரில் வசித்து வருபவர் மேரி. இவர் கணவரை பிரிந்தநிலையில் கடந்த 20 ஆண்டுகளாக அவரது மகன் அனீஸ் ஜஸ்டின் என்பவருடன் வசித்து வந்துள்ளார். அனீஸ் ஜஸ்டினின் மனைவி புஷ்பரதி.
புஷ்பரதிக்கும்,  மாமியார் மேரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

அவ்வாறு அண்மையிலும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மேரி மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அனைவரும் இரவு தூங்க சென்றுள்ளனர். இந்த நிலையில் மறுநாள் காலை மருமகள் புஷ்பரதி கோழிக்கூண்டை திறப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். அங்கு மேரி உடல் கருகி சடலமாக கிடந்துள்ளார். 

அதாவது வீட்டில் ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த மேரி வீட்டில் அனைவரும் இரவு தூங்க சென்ற பிறகு பின்புறம் சென்று,உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் மேரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement