இந்தியா சினிமா

முதல் இரண்டு இடத்தை பிடித்த ரஜினி, விஜய். லிஸ்டுலையே வராத அஜித்தின் பெயர்!

Summary:

Most trustable celebrity in india 2019 list

பொதுவாக சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள்தான் அதிக அளவில் பிரபலமாக உள்ளனர். அவர்கள் நடிக்கும் காட்சிகள், விளம்பரங்கள் என அனைத்தும் நொடி பொழுதில் மக்களை சென்றடைகிறது. இந்நிலையில் இது போன்ற நட்சத்திரங்களில் அதிக நம்பகத்தன்மை கொண்ட நடிகர், நடிகை யார் என்பது குறித்து டி.ஆர்.ஏ என்ற தனியார் அமைப்பு 16 நகரங்களில் ஆய்வு நடத்தி அதிக நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்கள் 2019 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய அளவில் முதல் இடத்தை அமிதாப்பச்சன் பிடித்தார். அமீர்கான், சல்மான் கான் அடுத்தடுத்து இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர். நடிகைகளில் தீபிகா படுகோனே முதல் இடத்திலும் காத்ரீனா கைப், மாதுரி தீட்ஷித் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஐஸ்வர்யா ராய்க்கு 6 வது இடமே கிடைத்தது.

தென்னிந்தியாவை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் இடத்திலும், தளபதி விஜய் இரண்டாவது இடத்திலும் உள்ளார். அஜித் பெயர் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. விக்ரம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement