மனைவி 4 மாதம் கர்ப்பம்..! 39 வயதில் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மரணம்..! உயிரிழந்தது எப்படி..? மனதை ரணமாக்கும் தகவல்..!

மனைவி 4 மாதம் கர்ப்பம்..! 39 வயதில் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மரணம்..! உயிரிழந்தது எப்படி..? மனதை ரணமாக்கும் தகவல்..!


meghana-raj-is-pregnant-chiranjeevi-sarjas-demise

பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பு காரணமாக 39 வயதில் உயிரிழந்த நிலையியல் அவரது மனைவி தற்போது நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழம்பெரும் கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் பேரன் சிரஞ்சீவி சார்ஜா. மேலும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான நடிகர் அர்ஜுனின் நெருங்கிய உறவினர். கடந்த 2009-ம் ஆண்டு வெளியான வாயுபுத்ரா என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவர் இதுவரை 20 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Siranjeevi sarja

மேலும் இவரது நடிப்பில் இந்த ஆண்டு நான்கு படங்கள் தயாராகிவருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 1:10 மணி அளவில் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா தனது தந்தையுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் மூச்சு திணறல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக பெங்களூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நெருடங்களிலையே சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 10 ஆண்டுகள் காதலுக்கு பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை மேக்னா ராஜை திருமணம் செய்துகொண்டார் சிரஞ்சீவி சார்ஜா.

Siranjeevi sarja

மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்லவந்தேன் என்ற படத்தில் நாயகியாக நடித்தவர். மேலும் தமிழ், மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்கள் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் முடியும் நிலையில் மேக்னா ராஜ் தற்போது நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

குழந்தையின் முகத்தை கூட பார்க்காமல் சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.