சினிமா

இங்கிருந்து தான் காதல் வளர்கிறது! ஆண் நண்பருடன் மீரா மிதுன் வெளியிட்ட வீடியோவால் கடுப்பான நெட்டிசன்கள்!

Summary:

Meeramithun

பிக்பாஸ் சீசன் 3ல் ஒரு போட்டியாளராக மாடல் மீராமிதுன் கலந்துகொண்டார். இவர் மிஸ் குயின் ஆஃப் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா ஆகிய போட்டிகளில் அழகிப்பட்டம் வென்றுள்ளார்.

மேலும் இவர் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்தக் கூட்டம் ஆகிய படங்களில் நடித்தவர். இவர் மோசடி செய்ததாக செய்திகள் வெளியானதால் மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16-வது போட்டியாளராக மீரா மிதுன் கலந்துகொண்டார். ஆரம்பம் முதலே இவரது நடவடிக்கையால் பிக்பாஸ் வீட்டிற்குள் பல சர்ச்சைகள் ஏற்பட்டன. அதன் காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். 

இந்நிலையில் தற்போது படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ அவ்வப்போது வீடியோ மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். அதேப்போல் தற்போது ஒரு ஆண் நபருடன் வீடியோ வெளியிட்ட மீரா அதில் இங்கிருந்து தான் காதல் வளர்கிறது என்றும் பதிவிட்டுள்ளார். 


Advertisement