எல்லாத்தையும் விட முக்கியம் இதுதான் ! காதலித்து ஏமாந்துபோன பிரபல நடிகை! செம ஷாக்கான ரசிகர்கள்!

எல்லாத்தையும் விட முக்கியம் இதுதான் ! காதலித்து ஏமாந்துபோன பிரபல நடிகை! செம ஷாக்கான ரசிகர்கள்!


meera nandhan talk about his love failure

மலையாள சினிமாவில் ஏராளமான சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா நந்தன். இவர் தமிழில் வால்மேகி எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் அய்யனார், காதலுக்கு மரணமில்லை, மற்றும் சண்டமாருதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

பின்னர் அவர் கடைசியாக கோல்ட் காய் என்ற மலையாள படத்தில் நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக படம் எதிலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்த அவர் சமீபகாலமாக கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். 

meera nandhan

இந்நிலையில் சமீபத்தில் தனது 30 வது பிறந்தநாளை  கொண்டாடிய அவர் தனது வாழ்க்கையில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அப்பொழுது அவர், எனது வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டேன். பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தேன். நடிகையானேன், பிறகு ரேடியோ ஜாக்கியானேன். பின்னர் காதலில் விழுந்து ஏமாற்றமடைந்து அதனால் ரொம்ப  கஷ்டப்பட்டேன். தற்போது என்னை நேசிக்க கற்றுக்கொண்டேன். எல்லாவற்றையும் விட குடும்பம்தான் முக்கியம் என்பதை தெரிந்துகொண்டேன் என்று கூறியுள்ளார்.