சினிமா

புகழின் உச்சியில், சினிமாவையே கலக்கிய பிரபல நடிகையுடன் மீரா மிதுன்! ரசிகர்களின் ரியாக்சனை பார்த்தீர்களா!!

Summary:

meera mithun with simran photo viral

தமிழ் சினிமாவில் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் போன்ற சில படங்களில் நடித்திருந்தவர் மீரா மிதுன். மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், மிஸ் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உட்பட பல அழகி பட்டங்களை பெற்றுள்ளார். பின்னர் பணமோசடி வழக்கில் சிக்கி தொடர்ந்து பல சர்ச்சைகளை சந்தித்து வந்தார்.

இந்நிலையில் மீராமிதுன் விஜய்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சினைகளை எழுப்பிய அவர் ரசிகர்களிடையே மோசமான விமர்சனங்களை பெற்றார்.அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பின்னரும் அவர் தொடந்து  பல சர்ச்சைகளில் சிக்கினார். 

இந்நிலையில் அவர் தற்போது பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் மீரா மிதுன் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை சிம்ரனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை சிலர் ஆதரித்தும், சிலர் சிம்ரனை விட நீங்கதான் வயதானதுபோல இருக்கிறீர்கள் என்பதுபோல மிக மோசமாக விமர்சனம் செய்தும் வருகின்றனர்.


Advertisement